SuperTopAds

கொரோனா நோயாளி தற்கொலை!! -சென்னையில் அடுத்த சோகம்-

ஆசிரியர் - Editor III
கொரோனா நோயாளி தற்கொலை!! -சென்னையில் அடுத்த சோகம்-

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து உள்ளது. சென்னையில் 50 வயது நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனை அடுத்து அவர் நேற்று மதியம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், அவரது அறையில் யாரும் இல்லாத நிலையில், திடீரென அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இன்றும் அதுபோல் ஒருவர்  தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று ஒருவர் தற்கொலை இன்று மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது வேதனை அளிக்கிறது.