ஊரடங்குச் சட்டம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி பாதைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
குறிப்பாக இம் மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை,மத்தியமுகாம், அக்கரைப்பற்று ,பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பெருநாள் தின பண்டிகையை கொண்டாடும் அப்பகுதி முஸ்லீம் மக்கள் அரசாங்க அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளில் இருந்து கொண்டாடி வருகின்றனர்.
இன்று(25) காலை தொடக்கம் மாலை வரை தத்தமது வீடுகளில் சமையல்களை மேற்கொண்டு உண்டு மகிழ்ந்ததை காண முடிந்தது.
ஊரடங்கு சட்டம் காரணமாக இன்று உணவகங்கள்இ புடவைக்கடைகள்இவீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கவில்லை.இன்றைய தினம் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை,ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை ,மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் , அக்கரைப்பற்று உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸார் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர்.