நோன்பு பெருநாள் தினத்தினை முன்னிட்டு 2ஆம் கட்ட காத்திருப்பு பட்டியல் கொடுப்பனவு வழங்கி வைப்பு

ஆசிரியர் - Editor III
நோன்பு பெருநாள் தினத்தினை முன்னிட்டு 2ஆம் கட்ட காத்திருப்பு பட்டியல் கொடுப்பனவு வழங்கி வைப்பு

நோன்பு பெருநாள் தினத்தினை முன்னிட்டு   அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி  பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வறிய மக்களுக்கு  இரண்டாம் கட்ட 5000 ரூபா காத்திருப்பு  கொடுப்பனவு சாளம்பைக்கேணி 1 ,2,3,4 ,முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் சனிக்கிழமை(23) முற்பகல்  ஆரம்பமானது.

இதனடிப்படையில்  நாவிதன்வெளி  பிரதேச செயலாளர்  எஸ.ரங்கநாதன்  வழிகாட்டலில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளில்  குறித்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நாவிதன்வெளி உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா, சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம் ,  நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன்,   பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  பங்குபற்றி மேற்பார்வை செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  சமூர்த்தி வங்கிகளூடாக   சமூர்த்தி பயனாளிகள்,குறைந்த வருமானம் பெறுவோர், தொழில் பாதுப்புக்குள்ளானவர்கள் மற்றும் மேல் முறையீடு செய்தவர்கள் போன்றவர்களுக்கான கொடுப்பனவு இதில் உள்ளடங்குவதுடன் சுமார்  சுமார் 400   பயனாளிகளுக்கு இக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன. ஏனையோருக்கு தொடர்ந்து வரும் நாட்களில் வழங்குவதாற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Ads
Radio
×