பெரும் படையுடன் புதையல் தேடிய பொலிஸார் கும்குமம் நிரப்பபட்ட மண் பானையை மீட்டனர்..!

ஆசிரியர் - Editor I
பெரும் படையுடன் புதையல் தேடிய பொலிஸார் கும்குமம் நிரப்பபட்ட மண் பானையை மீட்டனர்..!

புதையல் இருப்பதாக கூறப்பட்ட கருத்தை நம்பி புதையல் தேடிய பொலிஸார் ஒரு மண் பானையில் கும்குமத்தை மீட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் ஓமந்தை- குஞ்சுக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்றிருக்கின்றனர். 

காணி உரிமையாளர் ஒருவரினால் தனது காணியில் புதையல் இருப்பதாகவும், அதனை இனந்தொியாத நபர்கள் எடுக்க முயற்சித்ததாகவும் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார், நீதிமன்ற அனுமதியுடன் இன்றையதினம் காணியில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் குழி தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது 16அடி ஆழம் வரை 

குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் குங்குமம் வைக்கப்பட்ட சிறியகுடத்துடன் தகடு ஒன்றை தவிர வேறு எதுவும் கிடைக்காத நிலையில் தோண்டப்பட்ட குழி பின்னர் மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த காணியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், நீதவான், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள், 

தொல்பொருள் திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர், வைத்தியர்கள், கிராமசேவையாளர், முன்னிலையில் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு