சிறப்புற இடம்பெற்ற புன்னாலைக்கட்டுவன் கட்டுக்குள நாச்சிமார் கொடியேற்ற உற்சவம் (PHOTOS)

ஆசிரியர் - Admin
சிறப்புற இடம்பெற்ற புன்னாலைக்கட்டுவன் கட்டுக்குள நாச்சிமார் கொடியேற்ற உற்சவம் (PHOTOS)

பழமை வாய்ந்த யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு அன்னை ஸ்ரீ கட்டுக்குள நாச்சிமார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று வியாழக்கிழமை(15) முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பாகியுள்ளது.

கொடியேற்ற உற்சவக் கிரியைகளை  தேவஸ்தான ஆதீன குருவும், மஹோற்சவக் குருவுமான பிரம்மஸ்ரீ ந. சபாரத்தினக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நிகழ்த்தினர். வசந்தமண்டபப் பூஜையைத் தொடர்ந்து அம்பாள் வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.