சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் சமூக இடைவெளியை பேணி விசாரணைகள் முன்னெடுப்பு

ஆசிரியர் - Editor III
சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் சமூக இடைவெளியை பேணி விசாரணைகள் முன்னெடுப்பு

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் சிறு குற்ற விசாரணைகள் சமூக இடைவெளியை பேணி மர நிழலில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அண்மைக்காலமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து சுகாதார அமைச்சு ஜனாதிபதி செயலணி பல்வேறு சுகாதார செயல்திட்டங்களை மக்களின் நலன் கருதி அமுல்படுத்தி வருகின்றது.

இதனடிப்படையில் நாடு பூராக உள்ள அரச தனியார் நிறுவனங்களில் சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாக விளக்கங்கள் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக கைகழுவுதல் சமூக இடைவெளி முகக்கவசம் அணிதல் என்பன அடிப்படை சுகாதார செயற்பாட்டில் கடைப்பிடிக்கப்படுவதுடன் அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸாரின் பல்வேறு பிரிவுகளிலும்  சவளக்கடை   பிரதம  பொலிஸ்  பரிசோதகர்  எம்.எம்.அஷ்ரப் தலைமையில்    முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

--

Radio
×