SuperTopAds

அம்பனால் சேதங்கள்!! -பார்வையிட நேரில் களமிறங்கிய மோடி-

ஆசிரியர் - Editor III
அம்பனால் சேதங்கள்!! -பார்வையிட நேரில் களமிறங்கிய மோடி-

அம்பன் புயல் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி, மேற்கு வங்காளம் சென்றார்.

மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். 

மேலும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. இதேபோல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், அம்பன் சூப்பர் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை கொல்கத்தா சென்றடைந்தார். 83 நாட்களுக்குப் பின் பிரதமர் மோடி, முதல் முறையாக  டெல்லியை விட்டு வெளிமாநிலத்துக்குச் சென்றுள்ளார். 

கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். அதன்பின் அவருடன் சேர்ந்து, அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிடும் பிரதமர் மோடி, நிவாரணங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.