SuperTopAds

திருடப்பட்ட இரும்பு பாலத்தின் பாகங்கள் மறைத்துவைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது..! திருடர்கள் கைது எப்போது? எத்தனை குற்றங்களுக்கு தண்டணை..?

ஆசிரியர் - Editor I
திருடப்பட்ட இரும்பு பாலத்தின் பாகங்கள் மறைத்துவைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது..! திருடர்கள் கைது எப்போது? எத்தனை குற்றங்களுக்கு தண்டணை..?

கிளிநொச்சி பூநகரி- பரந்தன் வீதியில் 14ம் கட்டை பகுதியில் உள்ள இரும்பு பாலத்திலிருந்து திருடப்பட்ட பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை திவீரப்படுத்தியிருக்கின்றனர். 

துருப்பிடிக்காத உயர் தரத்திலான இரும்பு கம்பிகள், தட்டுக்களால் வடிவமைக்கப்பட்ட குறித்த பாலத்தின் பாகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளர்களால் திருடப்பட்டது. திருடப்பட்ட பாகங்களின் பெறுமதி மட்டும் ஏறக்குறைய 15 மில்லியன் என கூறப்படுகின்றது. 

இந்நிலையில் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுப் பொறியியலாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு குற்றத்தடுப்புப்பிரிவினர் ,வீதி அபிவிருத்தி அதிகாரசபைஅதிகாரிகள், பணியாளர்களின் விரைந்த செயற்பாட்டின் பலனாக கனகபுரம் வீதியில் 

பிரபல இரும்புவியாபாரி ஒருவரின் மறைவிடத்தில் துண்டாக்கப்பட்ட ஒருதொகுதி கேடர்களும் A9 வீதியில் கிளி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் குறித்த இரும்பு வியாபாரியின் மற்றோர் மறைவிடத்தையும் பணியாளர்கள் கண்டுபிடித்த நிலையில் அங்கும் பல கேடர்கள் 

தகரங்களால் மறைத்து மூடி வெட்டுவதற்கு தயார்நிலையில் இருந்தன. மேற்படி விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர் பரந்தன் -பூநகரி வீதியானது யாழ்ப்பாணம், மன்னார் என பல நுாற்றுக்கணக்கான மக்கள் தினமும் பயணிக்கும் வீதி 

மாற்று வழி இல்லாத பாலம் குடமுருட்டி பாலம் பூநகரி ,முழங்காவில் வைத்தியசாலை நோயாளர் காவுவண்டிகள் நீர்விநியோகம் மக்கள் போக்குவரத்து என முக்கிய கடப்பானாகிய இப்பாலத்தின் உதிரிபாகங்கள் திருட்டினால் கனரக வாகனபோக்குவரத்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிகமோசமான கொள்ளைகாரர்கள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என  மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.