தமிழகத்தில் அனல் காற்று!! -3 நாட்கள் வீசும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor III
தமிழகத்தில் அனல் காற்று!! -3 நாட்கள் வீசும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு-

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயர் சூட்டப்பட்டது. 

இந்த புயல் மேலும் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறி வடக்கு திசையில் மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்தது. 

இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களையொட்டிய கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்தப்புயல் மேற்கு வங்காளத்தில் கரையைக் கடந்தது. 

உம்பன் புயல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்துக்கொண்டது. இதனால், தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில்  வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

பலத்த காற்று வீசும் என்பதால் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு