சீனாவால் கொரோனா படுகொலைகள்!! -ஆவேசப்படும் டிரம்ப்-
கொரோனாவால் உலகில் அதிகளாவான படுகொலைகள் நடப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப் இதற்கு முழு பொறுப்பினையும் சீனாவே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நேற்றுமட்டும் 23,285 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 1,518 தொடர்புடைய இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் 1,551,853 பாதிப்புகள் மற்றும் 93,439 இறப்புகள் பதிவாகி உள்ளது.
நியூயார்க் மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து நியூ ஜெர்சி, இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தமது அமைச்சர்களுடன் கொரோனாவை எதிர்ப்பது குறித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.
சீனா மீது தமது தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் டிரம்ப் மேலும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சீனாவின் மெத்தனத்தால் உலகம் முழுவதும் பெரும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக டிரம்ப் ஆவேசத்துடன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிரான தனது சொல்லாட்சியை விரிவுபடுத்தினார், "அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீதான தவறான தகவல் மற்றும் பிரச்சார தாக்குதலுக்கு" பின்னால் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருக்கிறார்.