கொரோனா நோயாளிகளுக்கு மனநலன் பாதிக்கப்படும்!! -வைத்தியர்கள் எச்சரிக்கை-
லண்டன் பலகலைகழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளான நோயாளிகளுக்கு மனநலன் பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
'தி லான்செட் சைக்கியாட்ரி' இதழில் வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில் கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவர், மனநல பிரச்சினைக்கு ஆளாகிறார். இது வழக்கமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்படுவதுதான்.
எனினும் இந்த பிரச்சினை ஒருவரின் உயிரைப் பறிக்க அல்லது குணமடைவதை தாமதிக்க காரணமாக இருக்கிறது.
கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமடைந்தோர், தீவிர மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம். அதே நேரத்தில், மனப் பிரமை, குழப்பம், ஞாபக மறதி பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா நோயாளிகள் தனிமையில் வைக்கப்படுகின்றனர். அதுதான், அவர்களின் மனநல பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது.
அதனால் அவர்கள், 'வீடியோ' மூலம் தங்கள் சுற்றத்தாரை காணவும், பேசவும் வசதி செய்தால், மன நலம் மேம்படும் சாத்தியக் கூறு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.