கோவிட்- 19 சமூக பாதுகாப்பு நலனுதவி வேலைத்திட்டத்தின் நாவிதன்வெளியில் இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கி வைப்பு
பாறுக் ஷிஹான்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி வங்கிகளூடாக சமூர்த்தி பயனாளிகள்,குறைந்த வருமானம் பெறுவோர், தொழில் பாதுப்புக்குள்ளானவர்கள் மற்றும் மேல் முறையீடு செய்தவர்கள் போன்றவர்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (19) சாளம்பைக்கேணி 3 இல் இடம்பெற்றது.
இதனடிப்படையில் சாளம்பைக்கேணி 3 இல் குறித்த நிகழ்வு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.ரி சுரேஸ் மற்றும் சாளம்பைக்கேணி -3 கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஐ பாயிஸ் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.ஹபீபா, பட்டதாரி பயிலுநர் என்.எம் நிப்றாஸ், ஆகியோர் கலந்து கொண்டு முன்னெடுத்தனர்.
இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ.ரங்கநாதன் வழிகாட்டலில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளில் குறித்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நாவிதன்வெளி உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா, சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம் , நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றி மேற்பார்வை செய்து வருகின்றனர்.
மேற்குறித்த திட்டமானது அம்பாரை மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு என்பதுடன் இதனூடாக மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி முத்திரை பெறுவோர் மற்றும் சமுர்த்தி முத்திரைக்கு தகுதியானோர், தொழில் பாதிப்பு, மேன்முறையீடு பட்டியலில் மூலம் தெரிவு செய்யப்பட்ட 173368 குடும்பங்களுக்கு 86 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.