கொரோனாவை எதிர்க்கும் தடுப்பூசி ரெடி!! -சுவிஸ் நாட்டுடன் சேர்ந்து பெருமளவில் உற்பத்தி-
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயட்சியில் பல நாடுகள் இறங்கியுள்ள நிலையில் அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் கூறியதாவது:-
கொரோனா வைரஸை தடுக்கக்கூடிய ஆன்டிபாடியை நாங்கள் உருவாக்குகிறோம் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி. தடுப்பூசியின் அளவை எடுத்து அதன் செயல்திறனை மேலும் ஆய்வு செய்வதற்கான ஒரு பெரிய சோதனைக்கான திட்டங்களுடன் நிறுவனம் முன்னேறி வருகிறது.
தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் முதலீடு செய்கிறோம், எனவே சார்ஸ், கோவ்-2 விலிருந்து எங்களால் முடிந்தவரை மக்களைப் பாதுகாக்க உதவுவதற்காக நாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய அளவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று கூறினார்.
நிறுவனம் தனது தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய சுவிஸ் ஒப்பந்த மருந்து தயாரிப்பாளர் லோன்சா குரூப் ஏஜி மற்றும் அமெரிக்க அரசுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்றார்.