கொரோனாவுடன் நீண்ட காலம் பயணிக்க வேண்டிவரும்!! -உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை-
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுடன் மிக நீண்ட காலம் பயணிக்க வேண்டியு வரும் என்று எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் 73-வது சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கூறியதாவது:-
கொரோனா வைரசால் எளிதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வைரசின் ஆபத்தை எதிர்த்து நாம் நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆதலால் உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்
கொரோனா வைரஸ் ஆபத்தான எதிரி, இந்த வைரஸ் மிகவும் திறன்மிக்கது, வேகமாகப் பரவக்கூடியது, உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது. பெருந்தொற்று நோய்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மக்கள் தொகையில் அதிக நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்கள் 20-சதவீதத்துக்கு மேல் இல்லை, பெரும்பாலான இடங்களில் 10 சதவீதத்துக்கும் மேல் இல்லை.
இன்னும் விளக்கமாகக் கூறினால், உலக மக்கள் தொகையில் பெரும்பாலோனோர் இந்த வைரசின் தாக்குதலுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.
40 ஆண்டுகளுக்கு முன்பாக சின்னம்மை நோயிலிருந்து விடுபட உலக சுகாதார அமைப்பு என்ற குடையின் கீழ் உலக நாடுகள் ஒருங்கிணைந்து வந்தன. சித்தாந்தங்களை விட ஒற்றுமை மேலோங்கி வரும் போது, எதுவும் சாத்தியமே என்றார்.