SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான விடயங்களை பிரதேசசபைக்குள் நடாத்தமாட்டோம்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான விடயங்களை பிரதேசசபைக்குள் நடாத்தமாட்டோம்..!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை, அல்லது அவர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரச அமைப்பான பிரதேசசபைக்குள் நடந்து கொள்ளப்போவதில்லை. 

மேற்கண்டவாறு கூறியிருக்கும் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் அ.வேழமாழிகிதன், சட்டத்திற்கு புறம்பான விடயங்களை நாங்கள் செய்வதாக கூறி அரசியலாக்கும் வேலையை பொலிஸார் செய்வதாகவும் கூறியுள்ளார். 

கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள 

சேவைச்சந்தை, பசுமைப்பூங்கா ஆகியன கடந்த மூன்று நாட்களாக இராணுவத்தனரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றின் ஒரு பகுதியை இராணுவத்தினர் வசப்படுத்தி உள்ளனர். 

கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத வகையில் குறித்த பிரதேசம் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி பொலிசாரால் 

நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. 500 பேருக்கு மேல் கொண்ட நபர்களை இணைத்து விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து 

கௌரவ நீதிமன்றை திசை திரு்பபும் வகையில் பொலிசார் குறித்த தடை உத்தரவை பெற்று வழங்கியுள்ளனர். அவ்வாறான நிகழ்வொன்றை நாம் ஏற்பாடு செய்திருக்கவில்லை. பிரதேச சபை என்பது ஓர் அரச திணைக்களம் 

குறிதத் திணைக்களத்தில் ஒருபோதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் செயற்பாடுகளையோ ஊக்குவிக்கும் வகையில் செயற்படபோவதில்லை. பொலிசார் பிரதேச சபை சட்டங்களிற்கு மேல் 

வெவ்வேறு விடயங்களை கூறி அதனை அரசியல்மயாக்கி நீதிமன்றத்தினை திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டுள்ளமையாகவே அதனை பார்க்கின்றேன்.