SuperTopAds

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள்

ஆசிரியர் - Editor IV
ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள்

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில்  அரசியல் செய்ய முற்படுகிறார்கள். வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றமை  ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவு அகற்றப்படுதலுக்கு  எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு

கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் முற்பகல் ஞாயிற்றுக்கிழமை(17) இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்

2018 மாநகர சபையின் குறைகளை நிவர்த்தி செய்ய குழுவை நியமித்திருந்தோம் அவர்களின் ரகசிய அறிக்கையின் பிரகாரம்  திண்ம கழிவு அகற்றும் விடையத்தில் பாரிய சவாலை எதிர்கொண்டோம். எங்களுக்கு ஆளனி பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உள்ளது. நூறு பேரை வைத்துக்கொண்டு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் கல்முனை மாநகரத்தை பயன்படுத்துகின்ற 120 டன் குப்பை அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.

குப்பைகளை தரம் பிரித்து வழங்க மக்கள் தயார் இல்லை .  கல்முனையை 6 வலயமாக பிரித்து அதற்கு மூன்று வாகனங்களை பயன்படுத்தினாலும் 100 டன் குப்பை அகற்றியிருத்தாலும் வாகன தேவை அவசிமிருக்கிறது . கிழமைக்கு இரு தரம் வீடுகளுக்கு சென்று திண்மக் கழிவு அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றோம். அரச அலுவலகங்கள் பொதுப்பணித்துறை என்பவற்றில் வரி அறவிடுவதில்லை.

கொரோணா அனர்த்த காலத்தில் எமது உயிரை துச்சமாக நினைத்து ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள் .

தொழிலாளர்களுக்கு  நாளொன்றுக்கான ஊழியர்களின் ஊதியமாக ஒரு இலட்சத்து  எழுபது ஆயிரம் இவாகனங்களின் எரிபொருள் செலவு125000 நாள் செலவு திருத்த செலவு 40000 என தேவைப்படுகிறது.750 ஒரு டன் குப்பை கொட்டுவதற்கான  435000 நாள் ஒன்றுக்கு செலவாகின்றது.

வீட்டிற்கு ஒரு கிழமைக்கு 50 ரூபாய் தான் வரி மக்களிடம் அளவிடப்படுகிறது . சன நெருக்கடியான மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். உள்ளூராட்சி சட்டத்தின் படி வறுமை காலத்தில்  தவிர்ந்த  ஏனைய காலங்களில் கழிவகற்றலுக்கு கட்டணமாக வழங்குதல் வேண்டும். என்ற திட்டத்தில் திண்மக் கழிவு வரி அளவிடப்படுகிறது.

அநியாயமாக எந்த செலவுகளும் கல்முனை மாநகர சபையில் இடம்பெறவில்லை . வருமான ஆய்வு துறையினர்  வரியை ஏன் அறவிடவில்லை என எம்மிடம் கேள்வி கேட்கிறார்கள் .ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் அரசியல் செய்ய முற்படுகிறார்கள் வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர். இது ஆரோக்கியமான விடயமாக இல்லை என குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பில்  மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  அர்ஷாத் காரியப்பர் பிரதம  கணக்காளர் ஏச்.எச் தஸ்தீன் ஆகியோர்   கலந்து கொண்டனர்.