யாழ்.பருத்துறை பிரதேசசபை பெண் உறுப்பினருக்கு வீடு புகுந்து பொலிஸார் அச்சுறுத்தல்..! நினைவேந்தல் நடத்தினால் சுட்டு கொல்லப்படுவீர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை பிரதேசசபை பெண் உறுப்பினருக்கு வீடு புகுந்து பொலிஸார் அச்சுறுத்தல்..! நினைவேந்தல் நடத்தினால் சுட்டு கொல்லப்படுவீர்கள்..

யாழ்.வடமராட்சி கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டால் படையினர் துப்பாக்கி சூடு நடாத்துவார்கள். என பருத்துறை பிரதேசசபை உறுப்பினரின் வீடு புகுந்து பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை பிரதேசசபை பெண் உறுப்பினர் ரஜிதாவுக்கே பளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்படி அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

இன்று ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்ற பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சில பொலிஸார் குறித்த பிரதேச சபை உறுப்பினரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது நாளை திங்கட்கிழமை வடமராட்சியில் எங்கு? என்ன நேரத்திற்கு முள்ளிவாய்க்கல் நினைவேந்தலை செய்யப் போகின்றீர்கள் என்ற தகவலை தருமாறு கோரியிருந்தனர்.மேலும் அவ்வாறான நிகழ்வுகளை சொய்தால்

இராணுவம் வந்து உங்களை சுட்டுக் கொல்லும் என்று எச்சரித்தனர்.இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய வர வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தி சென்றுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு