மருந்தகங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை மூலமாக சீல் வைத்து மூடப்படும்.

ஆசிரியர் - Editor IV
மருந்தகங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை மூலமாக சீல் வைத்து மூடப்படும்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்  64   மருந்தகங்கள் காணப்படுகின்றன.இம்மருந்தகங்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் அனர்த்த காலப்பகுதியில் எமக்கு   பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருக்கின்றன எனவே இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனையில் அமைந்துள்ள கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் சனிக்கிழமை(16) மாலை   இடம்பெற்ற ஊடகசந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்  64   மருந்தகங்கள் காணப்படுகின்றன. தற்போது இம்மருந்தகங்கள் தொடர்பாக எமக்கு கொரோனா வைரஸ் அனர்த்த காலங்களில்  பலதரப்பட்ட குற்றச் சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.மிக முக்கியமாக கொரோனா வைரஸ் அனர்த்த காலம் என  கருதப்படுகின்ற சில நேரங்களில் மக்கள் வைத்தியசாலைக்குச் சென்று மருந்து எடுக்க முடியாத நிலைகளில் நாங்கள்  மருந்தகங்களை திறந்து மக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் சில சலுகைகளை வழங்கி அவற்றை இயங்க செய்திருந்தோம்.

ஆனால் இம்மருந்தகங்கள் யாவும்    ஆரோக்கியமாக   எந்தவிதமான நடவடிக்கையும்  மக்களுக்கு  செய்ததாக இல்லை என்ற முறைப்பாடுகளே கிடைத்துள்ளது.எனவே     உரிய மருந்துகளை மக்களுக்கு  கிடைக்க வழிவகை செய்ய  வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையில் இச்செயற்பாட்டை  ஏற்படுத்தவுள்ளோம்.

 அவ்வாறு இல்லாவிடின்  நீதித்துறையுடன் போலீசாரின் துணையுடன் குறித்த மருந்தக உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.இந்த ஆலோசனைகளை  எதிர்வரும் காலங்களில் மிகவும் இறுக்கமான நடைமுறையில்  மேற்கொள்ள உள்ளோம்.இதற்காக இரண்டு வாரங்களுக்கு  குறித்த மருந்தகங்களுக்கு அவகாசம்    வழங்கியிருக்கின்றோம்.

அந்த இரண்டு கால அவகாசங்களில்  பின்னர் உரிய  நடைமுறையை பின்பற்றி நடாத்தப்படாத மருந்தகங்களுக்கு எதிராக   சட்ட  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.பாரிய குறைபாடுகள் மருந்தகங்களில்  காணப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை மூலமாக சீல் வைத்து மூடப்படும்.

பொதுமக்களுக்கு விசேடமாக நோயாளிகளுக்கு பாதுகாப்பான மருந்து மாத்திரைகளை கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டியது எமது பாரிய பொறுப்புகளில் ஒன்றாகும் என்பதற்காக இந்நடவடிக்கையை எடுப்பதாக குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு