போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் சம்மாந்துறை பொலிஸார் கைது

ஆசிரியர் - Editor IV
போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் சம்மாந்துறை பொலிஸார் கைது

போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர்  திருடிய பொருட்கள் உட்பட போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர்.

கடந்த 12.4.2020 திகதி அன்று நிந்தவூர் கடற்கரை வீதியில் 58 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போது நபர் ஒருவர் தப்பி சென்றிருந்தார்.குறித்த சந்தேக நபர் மாந்தோட்டை என்னும் இடத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக சனிக்கிழமை(16) அன்று  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவரின் வழிநடத்தலில்    சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா   தலைமையில் துர்நடத்தை தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் உள்ளிட்ட குழுவினர்  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைதான குறித்த சந்தேக நபரிடம் 590 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.அதன் பின்னர் அச்சந்தேக நபரிடம்  முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது ஹெரோயின் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காகவே தானும்  மற்றுமொரு சந்தேக நபரான  720 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைதான  20 வயது மதிக்கத்தக்க நபரும் நிந்தவூர் 9 பகுதியில் உள்ள அஹதியா பாலர் பாடசாலை ஒன்றில் கடந்த 6 ஆம் திகதி மின்விசிறிகள் மூன்று களவாடி விற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய களவாடப்பட்ட பொருட்களை  வாங்கிய நபரை  பொலிஸார் அடையாளம் கண்டு இவ்வாறு களவாடி விற்கப்பட்ட பொருள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இவ்வாறு கைதான இரு சந்தேக நபர்களிடமும்  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை விசாரணையின் அடிப்படையில் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காகவே தாம் களவாடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.இவ்வாறு கைதான இரு  சந்தேக நபர்களும் தடயப்பொருட்கள் யாவும்  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நாளை  ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு