பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடிய இளைஞர்கள் பாரவூர்தி மீது மோதி விபத்து..!
பொலிஸார் துரத்தி சென்ற நிலையில் தப்பி ஓடிய இரு இளைஞர்கள் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் வவுனியா- குருமன்காடு புகைரத நிலைய வீதியில் மாலை 4 மணிக்கு இடம்பெற்றள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா குட்செட் வீதியை சேர்ந்த 39 வயதுடைய பாலன்,
கனேசபுரத்தை சேர்ந்த 39 வயதுடைய கிறிஸ்ரி ஆகிய இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்தை நேரடியாக கண்ட சிலர் எமக்கு கருத்து தெரிவிக்கையில்குருமன்காடு சந்தியில் நின்ற போக்குவரத்து பொலிஸார் ஒருவர் குறித்த மோட்டார் சைக்கிளை துரத்தி வந்ததாகவும் அதனாலேயே வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில்
விபத்து உண்டானது என்றும் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.