கடனுக்கான மாதாந்த தவணைப்பணம் தாமதமாக செலுத்தியதற்காக தண்டம் அறவிடும் வங்கி..! அரசு வழங்கிய வாக்குறுதி என்ன ஆனது?
இலங்கையில் இடர் நிலையினை கருத்தில் கொண்டு வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களை மீள செலுத்துவதற்கு அரசாங்கம் காவல அவகாசம் வழங்கிய நிலையில், கிளிநொச்சி கரைச்சி- வடக்கு ப.நோ.கூ சங்கத்தின் கீழ் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கி தாம் வழங்கிய கடன்களுக்கான தவணை பணத்தை காலம் தாழ்த்தி செலுத்துவதற்கு தண்டம் அறவிடுகிறது.
கொரோனா அபாயம் நிலவிய ஊரடங்கு காலத்தில் தவணைக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக மார்ச் மாதம் இறுதிக் காலத்தில் செலுத்த வேண்டிய பணம் மார்ச் 20ம் திகதி முதல் மே மாதம் 11ம் திகதி வரையில் ஊரடங்கு நிலவிய சமயத்தில் அரச வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த மேலும் கால அவகாசமும் வழங்குகின்றது.
ஆனால் கூட்டுறவு கிராமிய வங்கியில் கால அவகாசம் வழங்காதபோதும் நாம் வட்டியினையும் முதலையும் செலுத்துகின்றோம். இவ்வாறு செலுத்தும் பணம் உரிய தவணையில் செலுத்தவில்லை என்பதனால் முதல் , வட்டி ஆகியவற்றுடன் மேலதிகமாக 50 ரூபா தண்டப் பணமும் அறவிடப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. தற்போது இந்த மாதம்
தண்டம் செலுத்தினால் நாம் 4 மாதம் தண்டம் செலுத்தும் நிலமை ஏற்படும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கரைச்சி வடக்கு ப.நோ.கூ.சங்க பொது முகாமையாளர் அ.பற்றிக் ஜேம்சை தொடர்பு கொண்டு கேட்டபோது , பயனாளிகள் எம்மைத் தொடர்பு கொண்டு வினாவிய சமயம் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்
இயக்குநர் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது அங்கீகரிக்கப்படும் வரையில் தண்டப்பணம் அறவிடப்பட வேண்டும் எனத் தெரிவித்தமைக்கு அமையவே அறவிடப்படுகின்றது. எனப் பதிலளித்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசனை தொடர்பு கொண்டு கேட்டபோது , தற்போதைய சூழலில் தண்டப் பணம் அறவிட முடியாது .
இதனால் உரிய தரப்புக்களிற்கு அறிவுறுத்தல் வழங்கி தண்டப் பணம் அறவிடுவதை நிறுத்த ஆவண செய்யப்படும். எனப் பதிலளித்தார்.