தமிழினம் கருவறுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவல நாளில் மாலை 7 மணிக்கு தீபங்களை ஏற்றி நினைவுகூருங்கள்..! மாணவர் ஒன்றியம்..

ஆசிரியர் - Editor I
தமிழினம் கருவறுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவல நாளில் மாலை 7 மணிக்கு தீபங்களை ஏற்றி நினைவுகூருங்கள்..! மாணவர் ஒன்றியம்..

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ம் ஆண்டு நினைவேந்தல் மே-18ம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில், சமகால சூழலில் பெருமளவு மக்களை முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூட்ட முடியாதுள்ளது. 

எனவே அன்றைய நாளில் மக்கள் தமது வீடுகளில் மாலை 7 மணிக்கு தீபங்களை ஏற்றி உணர்வுபூர்வமான அனுட்டிக்கவேண்டும். மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. 

இது குறித்து இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். 

இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், தமிழ் இனம் கருவறுக்கப்பட்ட நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகும். அன்றைய நாளில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்காக ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலும், 

தாம் தங்கியிருக்கும் இடங்களிலும், வர்த்தக நிலையங்க ள் பொது இடங்களிலும் எமது மக்களுக்காக தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்துவதுடன், அன்றைய நாளில் உப்பும் அரிசியும், தண்ணீரும் கலந்த கஞ்சியை பருகி 

எமது மக்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலிகளை செய்யவேண்டும். எனவும் எமது இனம் அன்றைய நாளில் பட்ட துன்பங்களை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும். என கேட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு