SuperTopAds

இந்தியாவில் கொரோனா பலி 2,549 ஆக உயர்வு!!

ஆசிரியர் - Editor III
இந்தியாவில் கொரோனா பலி 2,549 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 134 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 122 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,293ல் இருந்து 2,415 ஆக நேற்று உயர்வடைந்து இருந்தது.  

24 ஆயிரத்து 385 பேர் குணமடைந்தும், 47 ஆயிரத்து 480 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்து 756ல் இருந்து 74 ஆயிரத்து 281 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 134 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,415ல் இருந்து 2,549 ஆக உயர்வடைந்துள்ளது.  

26 ஆயிரத்து 234 பேர் குணமடைந்தும், 49 ஆயிரத்து 219 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்துள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்து 281ல் இருந்து 78 ஆயிரத்து 3 ஆக உயர்வடைந்து உள்ளது.