பெரியநீலாவணை தொடர்மாடியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரை

ஆசிரியர் - Editor IV
பெரியநீலாவணை தொடர்மாடியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரியூட்டப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை சுனாமி தொடர் மாடி வீட்டுத்திட்டப் பகுதியில் இன்று 12 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரும் சமூகசெயற்பாட்டாளரும் பெரியநீலாவணைப்பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஏழைமாணவர்களுக்கு வட்ஸ் அமைப்பின் மூலம் இலவச வகுப்புக்கான ஏற்பாட்டாளருமான பெரியநீலாவணை சுனாமித் தொடர் மாடியில் வசித்துக்கொண்டிருக்கும் கு.கோகுலன் அவர்களது மோட்டார்சைக்கிலே விசமிகளால் தீ வைக்கப்பட்டதில் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

இம் மோட்டார் சைக்கிளை தொடர் மாடியின் கீழ்ப்பகுதியில் நிறுத்தி வைத்துவிட்டு அவர் தனது மேல்மாடியில் தூக்கத்தில் இருந்தபோதே மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தீயினால் தொடர்மாடி முழுதும் நள்ளிரவுவேளையில் புகை மண்டலமாக காட்சியளித்தமையால் அதில் வசித்த மக்கள் மின்னொழுக்கு மாடியில் ஏற்பட்டுவிட்டது என நினைத்து மாடியில் இருந்து வெளியில் ஓடிச்சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

இத்தீயினால் அம்மோட்டார் சைக்கிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமோர் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையினை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு