தமிழீழ விடுதலை புலிகளின் தீர்மானங்களை, தியாகங்களை கொச்சைப்படுத்தவில்லை..! மனதார மதிக்கிறேன். அம்மா சத்தியமா இது சுமந்திரன் சொன்னதுதான்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் தீர்மானங்களை, தியாகங்களை கொச்சைப்படுத்தவில்லை..! மனதார மதிக்கிறேன். அம்மா சத்தியமா இது சுமந்திரன் சொன்னதுதான்..

தமிழீழ விடுதலை புலிகளின் தீர்மானம் தொடர்பாக நாங்கள் இன்றைக்கு விமர்சனங்களை கூற முடியாது. அவர்களுடைய தியாகங்களை கொச்சைப்படுத்த முடியாது, கொச்சைப்படுத்தகூடாது. அவர்கள் தங்கள் உயிர்களை தங்களுக்காக அல்ல எங்களுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். அதை நான் எப்போதும் மதிக்கிறேன். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்ததாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் சமூக வலைத்தளம் ஒன்றின் ஊடாக நேற்று பகிரங்க நேர்காணலுக்கு அவர் வந்திருந்தார். 

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், தமிழீழ விடுதலை புலிகளின் தீர்மானம், அவர்களுடைய செயற்பாடு தவறு என நான் கூறவில்லை. அரச பயங்கரவாதத்திற்கு எதிராக அவர்கள் எடுத்த தீர்மானம், செயல் குறித்து இன்று நான் விமர்சிக்க முடியாது. 

இதனை நான் பல தடவைகள் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு கூறியிருக்கின்றேன். மேலும் அவர்களுடைய தியாகங்களை கொச்சைப்படுத்த முடியாது, கூடாது. அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்திருக்கின்றார்கள். தங்களுக்காக அல்ல எங்களுக்காக ஆகவே அவர்களின் முறை என்னுடைய முறைகாக இல்லாமலிருக்கலாம்.

ஆனால் அவர்களின் தியாகங்களை மதிக்கவேண்டும். அந்த தியாகத்தை நான் வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தமாட்டேன். எனக்கு ஆயுத போராட்டம் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இருந்திருந்தால் 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களால் பாதிக்கப்பட்ட என்னுடைய நண்பர்கள் பலர் 

பல ஆயுத போராட்டங்களில் இணைந்தபோது நானும் இணைந்திருப்பேன். அப்போது எனக்கு 19 வயது. ஆகவே ஆயுத வழியிலான போராட்டம் மீது நம்பிக்கையற்ற நான் அதன் ஊடாக நன்மைகளை பெற்றுக் கொள்வதற்காக புகழ்ந்து பேசுவதற்கு விரும்பவில்லை. அந்த வழியில் செய்யப்பட்ட உயிர் தியாகங்களை மதிக்கிறேன். 

வாக்கு பெறுவதற்காக அந்த தியாகங்களை நான் மலினப்படுத்தமாட்டேன் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு