தமிழீழ விடுதலை புலிகளையும், இன விடுதலை போராட்டத்தையும் தமிழ்தேசிய அரசியல் பாதையிலிருந்து அழிக்க சுமந்திரன் தலையால் நடக்கிறார்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளையும், இன விடுதலை போராட்டத்தையும் தமிழ்தேசிய அரசியல் பாதையிலிருந்து அழிக்க சுமந்திரன் தலையால் நடக்கிறார்..!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தமிழீழ விடுதலை புலிகள் குறித்துக் கூறியிருந்த கருத்து ஆச்சரியப்படக்கூடிய புதிய கருத்தல்ல. 

கடந்த 11 வருடங்களாக கூறிவரும் மிக பழைய கருத்து. என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 

2009ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கத்தை செய்யும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கமைய தமிழ்தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத அங்கமாக உள்ள விடுதலை புலிகளையும், 

போராட்டத்தையும் நீக்கவேண்டும். அதையே கூட்டமைப்பு இப்போது செய்கிறது. எனவும் கூறியுள்ளார். சிங்கள மொழியிலான சமூக ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்ட 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் 

அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கின்ற நிலையில், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், சிங்கள மொழியிலான சமூக ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பல கருத்துக்களை கூறியுள்ளார். 

குறிப்பாக ஆயுத போராட்டத்தை அல்லது விடுதலை போராட்டத்தை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. எனவும் இலங்கையில் தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் 

தாம் ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கின்றார். கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய காலம் தொடக்கம் கூட்டமைப்பு கொள்ளையிலிருந்து விலகி புதிய பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர். 

அதாவது தமிழ்தேசிய அரசியலில் இருந்து விலகிவிட்டனர் என 1 வருடங்களாக பல ஆதாரங்களுடன் நாங்கள் கூறினோம். முக்கியமான ஆதாரம் சுமந்திரன் அரசியலுக்குள் நுழைந்த 2010ம் ஆண்டு தேர்தலில் 

பேராசிரியர் வி.பி.சிவநாதன் ஒழுங்கமைப்பில் தலமையில் எனக்கம் சுமந்திரனுக்கும் இடையில் பொது விவாதம் ஒன்று இடம்பெற்றது. அதில் ஆயுத போராட்டத்தை, விடுதலை போராட்டத்தை 

தாம் அதர்மமாக பார்ப்பதாக தெளிவாக கூறியதுடன், தர்மம் மட்டுமே வெல்லும், அதர்மம் தோற்கும் என கூறியிருந்தார். அந்த விவாதத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் 

இன்னும் இறுக்கமாக யார் எதை சொன்னாலும் தான் எந்த இடத்திலும் ஆயுதப்போராட்டத்தை அதர்மம் என்றே கூறுவேன் எனவும், அதனாலேயே அது தோற்றது எனவும் கூறியிருந்தார். 

 இன்றும் அதே கருத்தை கூறியுள்ள நிலையில் தேர்தல் காலம் என்பதால் தமிழரசு கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்புக்கள் உள்ளவர்களே குழம்பி விமர்சனங்களை முன்வைக்கின்றார். 

மேலும் இந்த விடயத்தில் பேட்டியை மட்டும் பார்க்காமல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமைத்துவமும், சுமந்திரனும் கடந்த 11 வருடங்கள் கூறிவரும் கருத்தை பார்கிறபோது 

சுமந்திரன் புதிதாக ஒன்றையும் கூறவில்லை. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சம்மந்தன் போர் நிறைவடைந்தவுடன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் 

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த மற்றும் அப்போதைய அரசுக்கும் பாராட்டு கூறியவர், வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஒருபோதும் ஏற்கவில்லை என கூறியதுடன், 

தீர்மானம் எடுக்கப்பட்ட கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் பகிரங்கமாக கூறியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பும், அதன் தலமையும் இரக்கமற்ற அமைப்பு என கூறியுள்ளார். 

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை ஏற்று, தேசிய கீதத்தை தமிழில் பாட விடுங்கள் என கேட்டிருக்கின்றார். இது தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், உத்தியோகபூர்வ பேச்சாளரும் கூறும் கருத்து 

இந்த கருத்துக்களே கட்சி சார்பான கருத்துக்கள். மற்றபடி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, சிறீதரன் ஆகியோரின் கருத்துக்கள் 

கட்சியின் கருத்தாக அமையாது. கட்சியின் தலைவர், பேச்சாளருடைய கருத்துக்களே கட்சியின் கருத்துக்களாகும். கடந்த 11 வருடங்களாக இதையே கூறிவந்துள்ளனர். 

இதனை தொிந்து கொண்டே கட்சியினல் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும், அங்கத்துவ கட்சிகளும், இரா.சம்மந்தனை தலைவராகவும், சுமந்திரனை பேச்சாளராகும் வைத்துள்ளனர். 

தேர்தல் காலத்தில் கூறியுள்ள கருத்து கட்சியின் கருத்தாக உள்ள நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலையில் ஏதோ தங்களுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை. 

அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாக காட்ட தீவிரமாக முயற்சிக்கின்றார்கள். கடந்த 11 வருடங்களாக தமிழர் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கத்தை செய்யும் நிகழ்ச்சி நிரலை 

தேசிய தலைவரால் உருவர்கப்பட்ட கூட்டைமைப்புக்குள்ளிருந்தே நிறைவேற்றுகிறார்கள். அதனை மக்கள் மத்தியில் மூடி மறைக்க ஏனைய உறுப்பினர்களை கொண்டு தமிழ்தேசிய அரசியலை கதைக்க செய்து. 

இருவர் மட்டுமே குழப்பம் மற்றவர்கள் நல்லவர்கள் என காட்டினர். இந்த உண்மையை தமிழ் மக்கள் விளங்கிக் கொண்டு கூட்டமைப்பின் கொள்கை தமிழர் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கம் என்பதை புரிந்து 

அந்த தரப்பை நிராகரிக்க தயாராகும்போதே தமிழ்தேசிய அரசியல் பயணம் ஆக்கபூர்வமானதாகும். இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். என்றார். 

இதன்போது கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை என குறித்த நேர்காணலில் கூறிய கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 

2009ம் ஆண்டுவரை இந்த கருத்தை கூட்டமைப்பிலிருந்த எவரும் கூறவில்லை. 2009ம் அண்டுக்கு பின்னர் பலர் பலவாறாக பேசுகிறார்கள். 

இன்று தமிழ் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கத்தை செய்வதற்கு தமிழ்தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத அங்கமாகவுள்ள தமிழீழ விடுதலை புலிகளையும், போராட்டத்தையும் நீக்க வேண்டும். 

அதையே இன்று கூட்டமைப்பு செய்கிறது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு