வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக பேனாவை பயன்படுத்த வேண்டாம்
அரச ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
அரச அலுவலகங்களிலும் சரி தனியார் அலுவலகங்களிலும் சரி நாளை கடமைக்கு செல்லவும் இருக்கின்ற உத்தியோகஸ்தர்களுக்கு சில அறிவுரைகளை தெளிவுபடுத்த வேண்டி இருக்கின்றது. அந்த விதத்தில் உத்தியோகத்தர்களிடம் யாராவது ஒருவருக்கு காய்ச்சல்இ தடிமல்இ இருமல் இதொண்டை வலி இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்கள் நாளை கடமைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.நீங்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை முறைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
அதைத் தவிர சாதாரணம் என்று கருதுபவர்கள் கடமைக்கு செல்லுங்கள் அந்த விதத்தில் நீங்கள் கடமைக்கு செல்லுமிடத்தில் கட்டாயமாக ஒரு முகக் கவசத்தை அணிந்து செல்லுங்கள் கடமையாற்றும் நிறுவனத்தின் முன்புறமாக தொற்று நிற்கக்கூடிய பொறி முறைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு கைகளை தொற்று நீக்குவதற்கான தொற்று நீக்கிகள் அங்கு வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
பொதுவாக பின்னர் அலுவலகங்களுக்குள் நுழையும் போது தங்களது சப்பாத்துக்களின் அடி பாகங்களை
தொற்று நீக்கக் கூடிய வகையில் சில தட்டுக்களிலாவது ஒரு சென்டி மீட்டர் அளவிற்காவது தொற்று நீக்கி களை வைத்து அவற்றில் சுத்தப்படுத்திக் கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்தது மிகவும் நன்று . அந்த அலுவலகங்களின் வாசல்களில் உத்தியோகஸ்தர்கள் அது உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய கருவிகளை பயன்படுத்தி பார்க்கக் கூடிய வசதிகள் இருக்குமாயின் மிகவும் விரும்பத்தக்க ஒரு விடயம்.
அதைத்தவிர உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்துக்குள் தங்களது வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது அதேபோன்று கைரேகை பதிவேட்டை மேற்கொள்ள முன்னரும் கைரேகை பதிவேட்டை பதிவு செய்த பின்னரும் கைகளை நன்றாக தோற்று நீக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் அந்த இயந்திரத்தையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அத்துடன் பல மாதங்களின் பின்னர் கடமைக்கு திரும்பவும் இந்த சந்தர்ப்பத்தில் நண்பர்களை சக உத்தியோகத்தர்களை காண வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது இந்த வேலை அவர்களிடம் கை கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் சக உத்தியோகத்தர்களை தொடுவதோ அவர்களது உபகரணங்களை பாவிப்பது அருகில் செல்வதோ தவிர்க்கப்படவேண்டும் இதன்போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.