SuperTopAds

பரிதாபகரமாக உயிரிழந்த 4 வயது சிறுவன், 2வது சிறுவன் ஆபத்தான நிலையில், சுவர் இடிந்து விழுந்து அசம்பாவிதம்..!

ஆசிரியர் - Editor I
பரிதாபகரமாக உயிரிழந்த 4 வயது சிறுவன், 2வது சிறுவன் ஆபத்தான நிலையில், சுவர் இடிந்து விழுந்து அசம்பாவிதம்..!

திருகோணமலை- கிண்ணியா பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 4 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், 2 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளான். 

இந்தச் சம்பவத்தில் மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த றனீஸ் சான் ஹனி எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.காயமடைந்துள்ள 2 வயதுச் சிறுவன் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 

மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.