SuperTopAds

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,981 ஆக உயர்வு!!

ஆசிரியர் - Editor III
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,981 ஆக உயர்வு!!

இந்தியாவின் இன்றை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,981 ஆக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 95 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,886ல் இருந்து 1,981 ஆக உயர்வடைந்து உள்ளது.  

17 ஆயிரத்து 846 பேர் குணமடைந்தும், 39,834 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ல் இருந்து 59 ஆயிரத்து 662 ஆக உயர்வடைந்து உள்ளது.