SuperTopAds

ஊரடங்கு வேளை பெண்களைத் தாக்கி நகைகள், பணம் கொள்ளை!

ஆசிரியர் - Admin
ஊரடங்கு வேளை பெண்களைத் தாக்கி நகைகள், பணம் கொள்ளை!

கிளிநொச்சி- பரந்தனில், ஊடரங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை, வீடு ஒன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத குழுவினர், பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பரந்தன் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்குள், நேற்று இரவு 10.30 மணியளவில் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த வீட்டில் வசித்த இருந்த பெண்களைத் தாக்கிய அந்தக் கும்பல், , ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகள் என்பனவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம், உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றையும், அந்தக் கும்பல் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.