SuperTopAds

மக்களுக்காக அரசு வழங்கிய 5 ஆயிரம் ரூபாய் உதவி பணத்தில் 2 ஆயிரம் ரூபாயை மக்களுக்கு வழங்கி, 3 ஆயிரத்தை சுறுட்டிய கிராமசேவகர்..! சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
மக்களுக்காக அரசு வழங்கிய 5 ஆயிரம் ரூபாய் உதவி பணத்தில் 2 ஆயிரம் ரூபாயை மக்களுக்கு வழங்கி, 3 ஆயிரத்தை சுறுட்டிய கிராமசேவகர்..! சிக்கினார்..

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு  மந்துவில் மற்றும் மல்லிகைதீவு கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு வழங்கிய 5 ஆயிரம் ரூபாய் பணத்தில் ஒரு பகுதியை கொள்ளையடித்த கிராமசேவர் தொடர்பில் மக்கள் ஊடகங்க ளிடம் முறைப்பாடு தொிவித்திருக்கின்றனர். 

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளுக்கு ஒரு கிராம அலுவலரே கடமையாற்றி வருகின்றார். இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 

வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக கொடுப்பனவை பெறுபவர்கள் மற்றும் இவற்றுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் அரசினால் 5000 ரூபா மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த மாதம் 5000 வழங்கப்பட்டது.

அந்தவகையில் கடந்த மாதம் மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளில் காத்திருப்பு பட்டியலில் கொடுப்பனவு பெற்றவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு மீதி 3000 ரூபாவினை வழங்காமல் இருந்துள்ளார்இந்நிலையில் குறித்த விடயம் 

மக்களால் வெளியில் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சிலருக்கு அந்த கொடுப்பனவில் மீதி 3000 கொடுப்பனவையும் கொண்டு சென்று கொடுத்த கிராம அலுவலர் ஏனையவர்களுக்கு அந்த கொடுப்பனவுகளை வழங்கவில்லை. இந்நிலையில் சம்பவம் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் 

இன்று ஊடகங்கள் மக்களிடம் சென்று கருத்துக்களை பெற்ற வேளையில் கிராம அலுவலர் இன்று ஒரு குடும்பத்துக்கு கொடுப்பனவை கொண்டுவந்து வழங்கியுள்ளார். குறித்த பகுதியில் இன்று கூட அந்த கொடுப்பனவு வழங்கப்படாமல் பல குடும்பங்கள் உள்ளன. 

இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் வினவியபோது குறித்த விடயம் தொடர்பில் விசேட குழு அமைத்து விசாரணை நடாத்துவதாக கூறியிருக்கின்றார்.