SuperTopAds

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாகம்..! பணம், நகையும் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாகம்..! பணம், நகையும் கொள்ளை..

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த ரவுடி கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கி யதுடன், நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளது. 

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்றிரவு (06-05-2020) 10.30 மணியளவில் ஊடரங்கின் போது, வீடுகளுக்குள் புகுந்த ரவுடிக்கும்பல் பெறுமதியான பொருட்கள், வாகனம், உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை அடித்து நொருக்கி 

சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த பெண்களையும் தாக்கியதுடன், ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகள் என்பவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வும் பாதிக்கப்பட்ட மக்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 

முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.