மட்/அம்பாறை மாவட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஆசிரியர் - Editor IV
மட்/அம்பாறை மாவட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொரோணா தொற்று வேகமாக நாட்டில் பரவி வரும் இந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான  மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு   வியாழக்கிழமை (07) பிற்பகல் 2 மணியளவில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அகிலன் அறக்கட்டளை  தன்னார்வ தொண்டு நிறுவனம்  ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில்இலண்டன் அகிலன் அறக்கட்டளையின் ஸ்தாபகர் கோபாலப்பிள்ளை   கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன்  மட்டக்களப்பு பிராந்திய பதில் சுகாதார பணிப்பாளர்  வைத்தியர் எஸ்.நவலோஜிதன்   கல்முனை பிராந்திய தொற்றுநோய்க்கான பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் என் ஆசிப்  இலங்கை அகிலன் அறக்கட்டளை ஸ்தாபகர் மகேந்திரன்   கலந்து இவ்வுபகரணங்களை வழங்கி வைத்தனர். இவ் நிகழ்வை லண்டனைச் சேர்ந்த நிரஞ்சன் அவர்கள் முகாமைத்துவம் செய்திருந்தார்.

எமது பிராந்தியத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகள் கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 15 கருவிகளும் , மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனைக்கு 10 கருவிகளும் காலத்தின் தேவை கருதி வழங்கப்பட்டதாக கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் கருத்து தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில் ... குறிப்பாக எமது பிரதேசத்தில் நுழையும் நபர்களை பரிசோதனை செய்வதற்காக பொலிஸாருக்கு  2 உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகள் வழங்கப்படவுள்ளதோடு ஏனையவை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிட்டத்தகது .

லண்டன் அகிலன் அறக்கட்டளை ஸ்தாபகர் கோபாலப்பிள்ளைளையினால்  மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள MOH மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு 15000 பெருமதியுடைய 25 Smart Infrared Thermometer கருவிகள் இன்று கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் வழங்கி வைக்கப்பட்டன. இவ் நிகழ்வு அம்பாறை மாவட்ட அகிலன் அறக்கட்டளை அமைப்பாளர் சோ.வினோஜ்குமாரின்  தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு