கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீயூ லைவ் பௌன்டேசன் அமைப்பு உதவி

ஆசிரியர் - Editor IV
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீயூ லைவ் பௌன்டேசன் அமைப்பு உதவி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கல்முனை பிராந்திய மக்களிற்கு நீயூ லைவ் பௌன்டேசன் அமைப்பு உலருணவு வழங்கி வைத்துள்ளது.

புதன்கிழமை(6) முற்பகல் குறித்த பொருட்கள் யாவும் கர்ப்பிணி தாய்மார்கள்  தின கூலி சிங்கள குடும்பங்கள் என  கல்முனை பெரியநீலாவணை சேனைக்குடியிருப்பு பாண்டிருப்பு  நற்பிட்டிமுனை மணற்சேனை துரைவந்திய மேடு போன்ற பிரதேசத்தில் உள்ள தமிழ் சிங்கள குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன்   சுகாதார வைத்திய அதிகாரி ஆர். கணேஸ்வரன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்ஷுதீன் ஆகியோரால் இப்பொருட்கள் வழங்கி வைத்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு