SuperTopAds

கொரோனா தொற்று!! -இத்தாலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இங்கிலாந்து-

ஆசிரியர் - Editor III
கொரோனா தொற்று!! -இத்தாலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இங்கிலாந்து-

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாபவர்கின் எண்ணிக்கையில் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலக அளவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வருகிறது. இந்த ஆட்கொல்லிக்கு எதிராக தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டு பிடிக்கப்படாததால், கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பாதித்த ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். இதையடுத்து, ஐரோப்பா கண்டத்தில் கொரோனாவுக்கு அதிக மக்களை பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. 

தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது என்று தெரிவித்துள்ளது.