36 இலட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 இலட்சத்தை கடந்து உள்ளது.
கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிர்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து உலகும்ழுவதும் கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 36 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 21 லட்சத்து 91 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவர்களில் 50 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிக்கபட்டவர்களில் இதுவரை 11 லட்சத்து 79 ஆயிரத்து 215 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் பாதிப்பு 12 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 69 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடுகள் பாதிப்பு மரணம்
உலகம் 3,644,795 252,364
அமெரிக்கா 1,212,835 69,921
ஸ்பெயின் 248,301 25,428
இத்தாலி 211,938 29,079
இங்கிலாந்து 190,584 28,734
பிரான்ஸ் 169,462 25,201
ஜெர்மனி 166,152 6,993
ரஸ்யா 145,268 1,356
துருக்கி 127,659 3,461
பிரேசில் 108,266 7,343
ஈரான் 98,647 6,277
சீனா 82,881 4,633