அம்பாறை மாவட்ட தபால் சேவை மந்தகதி-பொதுமக்கள் சிரமம்

ஆசிரியர் - Editor IV
அம்பாறை மாவட்ட தபால் சேவை மந்தகதி-பொதுமக்கள் சிரமம்

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையையடுத்து கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு  மேலாக தடைப்பட்டிருந்த தபால் சேவை  கடந்த புதன்கிழமை(22)  முதல்  வழமை நிலைக்குத் திரும்பி இருந்தது.

எனினும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தொடக்கம்  தபால் திணைக்களத்தின் சகல செயற்பாடுகளும் தடைப்பட்டிருந்தன.தற்போது சில மாவட்டங்கள் தவிர்ந்து ஊரடங்குச் சட்டம்  தளர்த்தப்பட்டு  சுமூகமான நிலை ஏற்பட்டு வருவதையிட்டு  தபால் திணைக்களத்தின் சேவைகளும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதோடு  தபால் விநியோகமும்  வழமை போன்று இடம்பெற்றது.

இதன்படி  திங்கட்கிழமை(4)  அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதான தபால் அலுவலகங்கள்  சிலவற்றில்  கரும பீட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மந்த கதியில் இடம்பெற்றன.அத்துடன்  தபால் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பேணும் வகையில் கை கழுவுதல்  சமூக இடைவெளிக்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு மந்த கதியில் இடம்பெற்றதற்கு காரணம் சில தொழிந்சங்கம் விடுத்திருந்த பணிப்பகிஸ்கரிப்பாகும்.எனினும் சில உப தபாற்கந்தோர்கள் வழமை போன்று இயங்கின.கல்முனை தபாற்கந்தோர் மந்த கதியில் இயங்கியதை அவதானிக்க முடிந்தது.

மேலும். இம்மாவட்டத்தில் உள்ள தபாலகங்களுக்கு கொழும்பில் இருந்து தபால் பொதிகள் வந்த வண்ணம் உள்ளது .   தபால் திணைக்களத்திற்குரிய பிரத்தியேக வாகனத்தில்   தபால் சேவை இடம்பெறுகிறதை  காண முடிந்தது.

சம்மாந்துறை  தபால் திணைக்களத்தினூடாக பொது மக்களுக்கான சேவைகள்   வழமை போன்று இடம்பெற்றது.சாய்ந்தமருது மக்களுக்கான அத்தியாவசிய சேவையான மருந்து பொருட்கள்  வினியோகிக்கும் நடவடிக்கைகள்  சாய்ந்தமருது தபாற்கந்தோர் முன்னெடுத்தது.இங்கு  ஓய்வூதிய பணம் பெற்றுக்கொள்ள முதியவர்கள் வருகை தந்திருந்தனர் எனினும் அவர்களுக்கான பணம் வழங்கப்படவில்லை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு