SuperTopAds

புதிதாக 80 தனிமைப்படுத்தல் நிலையங்கள்!! -சென்னையின் நிலைமை மோசமடைகின்றது-

ஆசிரியர் - Editor III
புதிதாக 80 தனிமைப்படுத்தல் நிலையங்கள்!! -சென்னையின் நிலைமை மோசமடைகின்றது-

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு 750 திருமண மண்டபங்கள் மற்றும் 50 பாடசாலைகள் போன்றன தனிமைப்படுத்தும் நிலையங்களாக்கப்பட்டுள்ளன. 

அதிகரிக்கும் கொரோனா தொற்றால் சென்னையில் நிலைமை மோசமடைந்து செல்கின்றது. அங்கு பரவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதன்படி முதற்பட்டமாக கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்களை கண்காணிக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதன்படி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பாடசாலைகளில் 50 ஆயிரம் படுக்கைகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதேபோல் சென்னையில் உள்ள 750 திருமண மண்டபங்களும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, முகாம்களாக மாற்றப்பட்டு அங்கு படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.