SuperTopAds

நோன்பு காலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடக்கும் கல்முனை பகுதி -பொலிஸார் அசமந்தம்

ஆசிரியர் - Editor IV
நோன்பு காலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடக்கும் கல்முனை பகுதி -பொலிஸார் அசமந்தம்

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறும் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக கரையோர பிரதேசங்களான மருதமுனை கல்முனை கடற்கரை பகுதியை அண்டிய பகுதியில்  நோன்பு காலங்களில் இவ்வாறான   முக்கிய வீதிகளில் இந்நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது.

இதில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி மருதமுனை சாய்ந்தமருது பகுதியில் இளைஞர்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீதிகளுக்கு தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்தல் குழுவாக முகக்கவசம் இன்றி உரையாடுதல் போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தடுப்பதற்கு பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.இது தவிர மீன்பிடிக்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நிலைமை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

மேலும் ஊடக அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து சில இளைஞர்கள் வீதிகளில் வலம் வரும் சம்பவமும் அதிகரித்துள்ளது.