SuperTopAds

தனிமைப்படுத்தலில் இருந்தபோது இறந்தவரின் சடலத்தை எரிக்கவிடாது மக்கள் போராட்டம், பல மணிநேரத்தின் பின் காட்டில் எரிக்க தீர்மானம்..!

ஆசிரியர் - Editor I
தனிமைப்படுத்தலில் இருந்தபோது இறந்தவரின் சடலத்தை எரிக்கவிடாது மக்கள் போராட்டம், பல மணிநேரத்தின் பின் காட்டில் எரிக்க தீர்மானம்..!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்ப ட்டிருந்த நிலையில் உயிரிழந்தவருடைய சடலத்தை தகனம் செய்யவிடாது மக்கள் எதிர்ப்பு தொிவித்துவரும் நிலையில், காட்டில் தகனம் செய்ய இறுதியாக தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 80 வயதான முதியவர் ஒருவர் திடீர் சுகயீனத்தால் உயிரிழந்தார். 

அவருடைய உடலை முல்லைத்தீவு- குமாரபுரம் மயானத்தில் தகனம் செய்ய தீர்மா னிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் திரண்டு அதற்கு கடுமையான எதிர்ப்பை தொிவித்தனர். 

இந்நிலையில் வவுனியாவில்,மின்சார சுடுகாட்டில் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டபோதும், அந்த மின்சார சுடு காடு பழுதடைந்த நிலையில், பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் நெடுங்கேணி களிக்காடு பகுதியில் உள்ள காட்டு பகுதியில் தகனம் செய்ய சற்று முன்னர் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.