சம்மாந்துறை ஆலையடி வட்டை பண்னைக் காணியில் சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை மேற்கொள்ளத் திட்டம்
சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன விவசாயத் திணக்களத்துடன் இணைந்து அரசாங்கத்தின் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் சம்மாந்துறை பிரதேசத்தில் பொது தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ள அரச காணிகளில் சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வேலைத்திட்டத்திற்காக ஆலையடி வட்டை பண்னைக் காணியினை தயார்படுத்துவதற்காக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ரீ.ஏ.கரீம் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக காணி பிரிவு குடியேற்ற உத்தியோகத்தர் ஏ.எல்.பிஸ்ருள் ஹாபி உள்ளிட்ட குழுவினர் இன்று மதியம் நேரில் சென்று பயிர்செய்கை மேற்கொள்ளவுள்ள பண்னைக் காணியை பார்வையிட்டனர்.
இதன்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 15 வகையான உணவுப் பொருட்களை இவ் பண்னைக் காணியில் பயிரிடுவது தொடர்பாகாவும், பயிர் செய்கை மேற்கொள்வது மற்றும் பராமரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
சம்மாந்துறை ஆலையடி வட்டை பண்னைக் காணியில் உப உணவு பயிர்செய்கை பயிரிடும் சௌபாக்கியா வேலைத்திட்டம் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.