SuperTopAds

அம்மா உணவகத்தால் தமிழகத்தில் 1.22 கோடி பேர் பயன்!! -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்-

ஆசிரியர் - Editor III
அம்மா உணவகத்தால் தமிழகத்தில் 1.22 கோடி பேர் பயன்!! -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்-

ஊடரங்கு சட்டத்தால் தமிழகத்தில் முடங்கியுள்ள 1.22 கோடி மக்கள் அம்மா உணவாகத்தால் பயனடைகின்றார்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் திகதி வரையில் 789 கட்டுப்பாட்டு அறைகள், 3 இலட்சத்து 203 களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களுக்கு மொத்தம் 31.39 கோடி ரூபா சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 658 அம்மா உணவகங்களிலும் நாள் ஒன்றுக்கு மொத்தம் 6.25 இலட்சம் பொதுமக்கள் உணவு அருந்துகின்றனர்.

ஊரடங்கு காலம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அம்மா உணவகங்களில் மொத்தம் 2.02 கோடி இட்லிகளும், 76.67 லட்சம் கலவை சாதங்களும், 46.91 இலட்சம் சப்பாத்திகளும் வழங்கப்பட்டுள்ளன. 

இதுவரை மொத்தம் 1.22 கோடி மக்கள் அம்மா உணவகம் மூலம் பயனடைந்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் நாள்தோறும் 3 வேளையும் தரமான உணவு தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும்.

அம்மா உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் அந்தந்த பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.