தொழிலாளர்கள் தொழில் இழந்து நிர்க்கதியான சூழ்நிலையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு சரியான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்
தொழிலாளர்கள் தொழில் இழந்து நிர்க்கதியான சூழ்நிலையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு சரியான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.தேர்தல் குறித்த ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி சிந்திக்கின்றன நாங்கள் மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறோம். எமது நாடு நல்ல சுகாதாரமான ஒரு தேசமாக மாற வேண்டும் அதை சிந்தித்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதியையும் கட்சிகளையும் நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம் என கல்முனை பரலோக வாசல் தேவ சபையில் மத போதகர் ஏ.கிருபைராஜா தெரிவித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கல்முனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை(1) நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
தற்போது உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோணா வைரஸ் தாக்கத்தால் மே தின கொண்டாட்டங்கள் நடத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது. தொழிலாளர் தினத்தில் ஒரு காரியத்தை அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் முன்வைக்க விரும்புவது என்னவென்றால் முக்கியமாக இந்த தொழிலாளர்கள் தொழில் இழந்து நிர்க்கதியான சூழ்நிலையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு சரியான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக தொழில் இல்லாதபடி பல மாதங்களாக அவர்கள் உண்ண உணவு இன்றி அநேகம் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கான நிவாரண உதவிகள் ஜனாதிபதி பிரதம மந்திரி மந்திரிமார்கள் அதை செய்வதற்கு நிவாரணம் வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறோம்.தற்போதைய சூழ்நிலையில் வைரஸின் பாதிக்கப்பட்ட பிரதேச செயகங்களில் இ மாநகர சபையிலும் நகரசுத்தி தொழிலாளர்கள் இவர்களுக்கு உரிய பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டும் . ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புக்களும் வழங்கப்பட வேண்டும். இந்த தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியிடம் வேண்டிக் கொள்கிறோம் .
தேர்தல் குறித்த ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி சிந்திக்கின்றன நாங்கள் மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறோம். எமது நாடு நல்ல சுகாதாரமான ஒரு தேசமாக மாற வேண்டும் அதை சிந்தித்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதியையும் கட்சிகளையும் நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம் என குறிப்பிட்டார்.