தொழினுட்பங்களை பயன்படுத்தி நீர் குழாயில் கைகழுவும் முறை கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து கைகளை பாதுகாக்கவும், சுகாதாரத்திற்கு ஏற்ற முறையில் கைகளை சுத்தம் செய்யவும் புதிய தொழினுட்பங்களை பயன்படுத்தி தொடுகை மூலம் அல்லாமல் கை அசைவு முலம் மற்றும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி இயக்கம் மூலம் இயக்கும் நீர் குழாயில் கைகழுவும் வசதிகள் கொண்ட தொழிநுட்ப கண்டுபிடிப்பை கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் கடந்த வருடம் 2019 உயர்தர பிரிவில் பொறியியல் தொழினுட்பத்தில் கல்வி கற்று தற்போது பல்கலைக்கழக நுழைவுக்கு காத்திருக்கும் எஸ்.அஷ்ஷாக் என்ற மாணவன் உருவாக்கியுள்ளார்
இதனை தான் கல்வி பயின்ற கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் பாடசாலை அதிபர் எம்.ஐ.ஜாபீர் முன்னிலையில் அறிமுகம் நேற்று நேற்று (30) மாலை செய்தது மாத்திரம் அல்லாமல் தான் கற்ற பாடசாலைக்கு இவ் தொழிநுட்ப முறையில் கை கழுவும் உபகரணத்தை அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மாணவன் எஸ்.அஷ்ஷாக் கருத்து தெரிவிக்கையில்
அன்றாடம் நாம் நீர் குழாயினை தொடுகை மூலமே திறந்து கைகளினை கழுவி வருகின்றோம்.இதற்கு மாற்றமாக
தொடுகை மூலம் அல்லாமல் தொழிநுட்ப முறையில் நீர் குழாயில் கையினை கழுவும் நுட்பமுறை கண்டுபிடிப்பை
மேற்கொண்டுள்ளேன் .
இதனை இரு முறை மூலம் இயக்க முடியும் சென்சர் தொழிநுட்பத்தின் மூலம் அசைவினால் இயக்க முடியும் (0n/Off) மற்றையது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மூலம் குரல் பதிவை மேற்கொள்வதவன் ஊடாக இயக்க முடியும் (on/off) இதன் மூலம் எமது செயற்பாடுகளை தொடுகை இல்லாம் இலகுவாக மேற்க்கொள்ள முடியும் என்றார்.மேலும் இதனை உருவாக்க துனை புரிந்த இறைவனுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்தவனாக,எனது பெற்றோர்கள் எனது குடும்பத்தனர்கள்,பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர் மற்றும் ஆசிரியர்கள் ,நண்பர்கள் ,உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
இது தொடர்பாக கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ ஜாபிர் கருத்து தெரிவிக்கையில்
எமது பாடசாலை நீண்ட காலமாக பல புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வரலாற்று சாதனை புரிந்து வருகின்றது பாடசாலையில் புதிய கண்டுபிடிப்பாளர்கள் கொண்ட கழகம் (inventer club) காணப்படுகின்றது இதில் பல மாணவர்கள் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள் .மேலும் மாணவர்கள் காலத்திற்கு ஏற்ற வகையில் பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது எமது பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழக நுழைவை எதிர்பார்த்து காத்திருக்கும் எஸ்.அஷ்ஷாக் என்ற மாணவன் கொரோனா தொற்றில் இருந்துபாதுகாக்க ,சுகாதாரத்திற்கு ஏற்ற விதமாக கைகளை சுத்தம் செய்ய கைகளால் நீர் குழாயினை திறக்கமால் அசைவுக்கள், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி தொழினுட்பங்களை பயன்படுத்தி காலத்துக்கு ஏற்ற வகையில் இவர் இதனை அறிமுகம் செய்துள்ளார்.இவரின் முயற்சியினை பாரட்டுகிறேன். மேலும் இத் தொழிநுட்ப முறையின் மூலம் உருவாக்கிய உபகரணத்தை எமது பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மேலும் இவ்வாறான செயற்பாடுகளை செய்ய ஊக்கமளித்த , பயிற்றுவித்த எமது ஆசிரியர்கள் அனைவருக்கு நன்றியினை தெரிவிக்கிறேன் என்றார் .
இதனை தான் கல்வி பயின்ற கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் பாடசாலை அதிபர் எம்.ஐ.ஜாபீர் முன்னிலையில் அறிமுகம் செய்தது மாத்திரம் அல்லாமல் தான் கற்ற பாடசாலைக்கு இவ் தொழிநுட்ப முறையில் கைகழுவும் உபகரணத்தை அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது