கடந்த காலங்களில் மேதினக் கூட்டங்கள் என்பது தொழிலாளர்களுடைய பாதுகாக்கின்ற கூட்டமாக நடைபெறவில்லை

ஆசிரியர் - Editor IV
கடந்த காலங்களில் மேதினக் கூட்டங்கள் என்பது தொழிலாளர்களுடைய பாதுகாக்கின்ற கூட்டமாக நடைபெறவில்லை

நாட்டில்  கடந்த காலங்களில் மேதினக் கூட்டங்கள் என்பது   தொழிலாளர்களுடைய பாதுகாக்கின்ற   கூட்டமா? அல்லது கட்சி கூட்டமா என எண்ணத் தோன்றும் வகையில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கட்சியும்  தங்களுடைய  ஆதரவாளுக்கு    பணம் கொடுத்து சில கட்சிகள் சாராயம் கொடுத்து தங்கள் பலத்தைக் காட்டுவதற்காக மேதினக் கூட்டங்களை நடத்தியதை  கண்டு இருக்கின்றோமே தவிர உண்மையிலேயே தொழிலாளர் உரிமைகள்  பாதுகாக்கின்ற கூட்டமாக காணவில்லை   என  முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு    ஊடகவியலாளர் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை(1)   நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

ஐரோப்பாவில் நடைபெற்ற தொழிலாளர்கள் பிரச்சினை, பிரெஞ்சுப் புரட்சி  அந்தப் புரட்சியின் காரணமாக தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக வேண்டியும் அவர்களுடைய உரிமைகளை பிரகடனப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தான் ஒரு தினம் மே தினம் உருவாக்கப்பட்டது அந்த தினம் அத் தினத்தில்  முக்கியமாக சொல்லுகின்ற செய்தி தொழிலாளர்களுடைய உரிமைகள் அவருடைய வேதனங்கள் வழங்கப்பட வேண்டும் என்கிற ஒரு செய்தியைத் தான் நாங்கள் இந்த தினத்தின் மூலம் உலகுக்கு சொல்லுகின்றோம்.

 ஒரு காலத்தில் ஐரோப்பாவில் தொழிலாளர்கள் அநியாய நடாத்தப்பட்டார்கள் அவருடைய சம்பளம் சரியாக கொடுக்கப்படவில்லை அவருடைய வேலைக்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்படும் இல்லை அவர்களுக்கு ஓய்வு இன்றி வேலை வாங்கிய சந்தர்ப்பங்களில் காரணமாகத்தான் இவ்வாறு தொழிற்புரட்சி ஏற்பட்டதை நாங்கள் வரலாற்றில் காண்கிறோம்.இன்றும் உலகத்திலேயே சில  இடங்களிலே தொழிலாளர்கள் அநியாயம் செய்யப்படுகின்ற சூழ்நிலை தான் காரணம் என்றும் அவர்கள் குரிய சரியான வேதனங்கள் கொடுக்கப்படாத சூழலிலே நாங்கள் காண்கின்றோம் அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு அப்பால் மேலதிகமாக அவர்கள் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள் . இவ்வாறான செயற்பாட்டை ஒரு உழைப்பாளர் தினத்தின் மூலம் தொழிலாளர்களுடைய அந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற செய்தியை நாங்கள் மே தினம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

  உங்களுக்கு தெரியும் நம்து நாட்டிலே கடந்த காலங்களிலே மேதினக் கூட்டங்கள் என்பது அது தொழிலாளர்களுடைய பாதுகாக்கின்ற   கூட்டமா? அல்லது கட்சி கூட்டமா என எண்ணத் தோன்றும் வகையில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கட்சியும்  தங்களுடைய  ஆதரவாளுக்கு  சில கட்சிகள் பணம் கொடுத்து சில கட்சிகள் சாராயம் கொடுத்து தங்கள் பலத்தைக் காட்டுவதற்காக மேதினக் கூட்டங்களை நடத்தியதை  கண்டு இருக்கின்றோமே தவிர உண்மையிலேயே தொழிலாளர் உரிமைகள்  பாதுகாக்கின்ற கூட்டமாக காணவில்லை.ஒரு மேதின கூட்டத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா கொல்லப்பட்டார் அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியை சிலகாலம் மேதினக் கூட்டங்களை நடத்துவதைத் தவிர்த்து வந்தது பின்னர் அந்த கூட்டங்களை கொண்டாட்டங்களை கொண்டாடி வருவதைக் காண்கின்றோம்.

கடந்த வருடம் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மே தின கொண்டாட்டங்கள் கொண்டாடப்படவில்லை இந்த வருடம் நாங்கள் கொரோணா  பயங்கரவாதத்துக்கு நாங்கள் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் .கொரோணா  பாதிப்பால் மேதினக் கூட்டங்களை நடத்த முடியாமல் போய் இருந்தாலும் தொழிலாளர்களின் நலன் சார்ந்த விடயங்கள் அவர்களது சுகாதார விடயங்கள் குறித்து அரசாங்கம் சிந்தித்து சலுகைகளை வழங்க முடியும் இதுகுறித்த பிரகடனங்களை அரசும் அரசுக்கு சார்பான காட்சிகளும் வலியுறுத்தவேண்டும்.  முகமது நபியின் கூற்றை போல் ஒரு தொழிலாளியின் வியர்வை காயும் முன் அவருக்கான வேதனத்தை வழங்கிவிட வேண்டும் என்பதுபோல் அரசாங்கம் செயற்பட வேண்டும்.

தற்போதைய சூழ் நிலையில்   கொரோனாவிற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையாளர்கள் முடிவெடுப்பார்கள் மக்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என மக்களுக்கான  ஒரு தேர்தலை நடத்துவது என தேர்தல் செயலகம் அரசாங்கமும் ஆலோசனை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றது இந்த மே தினத்தில் அனைத்து தரப்பினரும் ஒரு உறுதிப்பாட்டை எடுத்துக்கொள்ளவேண்டும் எம்மிடமுள்ள தொழிலாளர்களை அவ்வாறு கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு