தமிழ்தேசிய தலைவரை விமர்சிக்கும் அருகதை உனக்கில்லை..! மன்னிப்பு கேட்டால்போதாது காட்சியை நீக்கு..
தேசிய தலைவர் வே.பிரபாகரனை விமர்சிக்கும் இந்திய மலையாள திரைப்படத்திற்கு கண்டனம் தொிவித்திருக்கும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மன்னிப்பு கேட்டது போதாது காட்சிகளை நீக்கவேண்டும் என கூறினார்.
மலையாள திரைப்பட நடிகர் துல்கர் சல்மான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை நாயுடன் ஒப்பீடு செய்து திரைப்படம் ஒன்றை வெளியிட்டி ருந்தார். அது தொடர்பாக கருத்து தொிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.