SuperTopAds

தமிழரகத்தில் 3.54 கோடி ரூபா அபராதம்!! -ஊடரங்கை மீறியோருக்கு விதிக்கப்பட்டது-

ஆசிரியர் - Editor III
தமிழரகத்தில் 3.54 கோடி ரூபா அபராதம்!! -ஊடரங்கை மீறியோருக்கு விதிக்கப்பட்டது-

தமிழகத்தில் இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு 3.54 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு வரும் மே 3 ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.  தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது.  இதனை மீறி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 3 இலட்சத்து 75 ஆயிரத்து 747 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 இலட்சத்து 46 ஆயிரத்து 71 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை 3 கோடி 54 இலட்சம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கடந்த 16 ஆம் திகதி முதல் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.