இங்கிலாந்தில் மறைக்கப்பட்ட கொரோனா உயிரிழப்புக்கள்!! -3,800 பேருடைய தகவல்கள் வெளியாகின-
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 1 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்த தகவல் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பல நாடுகள் கொரோனா வைரசுக்கு பலியானோர் தொடர்பான தகவல்களை மறு கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கணக்கீட்டின் போது கணக்கில் வராமல் ஏற்கனவே கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா பரவிய நாள் முதல் கணக்கில் வரமால் வைரசுக்கு உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், இந்த மறு கணக்கீட்டு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டது. அதில் வைரசுக்கு கணக்கில் வரமால் ஏற்கனவே 3 ஆயிரத்து 811 பேர் உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகள் பெரும்பாலும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த கணக்கீட்டின் படி, இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேலும், அங்கு நேற்று மட்டும் புதிதாக 601 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.