இந்தியாவில் கொரோனா பலி 1074 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இந் நோயால் பலி எண்ணிக்கை 1074 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 33050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1718 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1074 ஆக உயர்ந்துள்ளது. 8325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு எண்ணக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 9915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 432 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 4082 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 197 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் 2561 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 129 பேர் மரணம் அடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 3439 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 56 பேர் உயிரிழந்துள்ளனர்.