SuperTopAds

இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! - கடனட்டை தரவுகளை திருடும் இணையத் தளங்கள்!

ஆசிரியர் - Admin
இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! - கடனட்டை தரவுகளை திருடும் இணையத் தளங்கள்!

இணைய தளங்களின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் கடனட்டை தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத அவ்வாறான இணையத்தளங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சில போலி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.